அஸ்ஸலாமு அலைக்கும்....  நாஸித் அஹ்மத் என்பவர் அஹ்மதிய்யா ஜமாஅத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நிஸார் முஹம்மது அவர்கள் தனது முக நூலில் கொடுத்த பதிலின் மொத்த தொகுப்பை இங்கு பதிவு செய்கிறேன்.. 

Friday, May 13, 2016

விவாத நிறைவுத் தொடர் - 22


நாம் மூன்று தலைப்புகளில் விவாதித்துள்ளோம். முதல் தலைப்பு ஈஸா நபி –அலை- அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதாகும். இந்த தலைப்பில், குரான் அடிப்படையில் மிகவும் தெளிவாக ஈஸா நபி இறந்துவிட்டார்கள் என்று நிரூபித்துக் காட்டியுள்ளேன்.

ஆனால் ஈஸா நபி இறந்தால் என்ன உயிரோடு இருந்தால் என்ன, அதனால் நமக்கு ஈமானில் என்ன பதிப்பு ஏற்படப்போகிறது என்றெல்லாம் நீங்கள் கூறுவது புரியமுடிகிறது.

‘’அல்லாஹுவைப் போன்று எவருமே, எதுவுமே இல்லை’’ என்று குரானில்

Thursday, May 12, 2016

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் சப்ஜக்ட் - 21 அப்ஜத் கணக்கு


எனது கடந்த தொடரில் குரானில் உள்ள ஒவ்வொரு சுருக்கெழுத்துக்கும் (அல்முக்கத்திஆத்) பொருள் உண்டு என்றும்,

மேலும் அப்ஜத்தின் படி சில ஆயத்துகள் சிறந்த கருத்துக்களை கூறுகிறது என்பதையும் சுருக்கமாக விளக்கியுள்ளேன். பல இறையடியர்களும் சுருக்கெழுத்தின்படி விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள்.

மேலும் ஓர் உதாரணம்.
சுருக்கெழுத்தான அலிஃப், லாம், மீம் ஆகியவற்றின் கூட்டுத் தொகை, அப்ஜத் கணக்கின் படி 71 ஆகும். இது ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிக்கிறது.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் சப்ஜக்ட் - 21 PART 1 அப்ஜத் கணக்கு


‘’காறி உமிழத் தகுதியான மிர்சாவின் கணக்குப்பாடம்’’ என்று தொடரை ஆரம்பித்துள்ளாய்.

அப்ஜத் கணக்கைப் பற்றி abcd தெரியாத நீ, அதைப் பற்றி அறியவும் விரும்பாமல், இவ்வாறு நபி வாதம் செய்த அஹ்மத் –அலை- அவர்களை இகழ்ந்துள்ளாய்.

ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். நீ பலருடனும் விவாதம் செய்துள்ளாய். ஆனால் எவரிடமாவது நீ இந்தளவுக்கு தரம் தாழ்ந்து எழுதியிருக்கிறாயா என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், இல்லை என்று

Wednesday, May 11, 2016

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் சப்ஜக்ட் - 20 தாப்பத்துல் அர்லு

குரான் 27:83 “அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படும்போது நாம் அவர்களுக்காக பூமியிலிருந்து கடிக்கும் கிருமியை (தாப்பத்துல் அர்லு) வெளிப்படுத்துவோம். மக்கள் நம் அடையாளங்களில் நம்பிக்கை கொள்ளாததே அதற்குக் காரணம்”

அஹ்மத் -அலை- அவர்கள் இக்காலத்தில் மசீஹ் மஹ்தி என்று வாதம் செய்தபோது ஆலிம்கள் ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல அவர்களை ஏளனம் செய்தும், பல்வேறு துன்பங்கள் கொடுத்து கஷ்டப்படுத்தினார்கள்.

ஆனால் அல்லாஹு குரானில், நம் அடையாளங்களில் நம்பிக்கை கொள்ளாததால் பூமியிலிருந்து கடிக்கும் கிருமியை (தாப்பத்துல் அர்லு)

Tuesday, May 10, 2016

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் சப்ஜக்ட் - 20 PART 1 தாப்பத்துல் அர்லு


உனது இந்த தொடரில் பல கருத்துக்களை முன்பின் வைத்து உளறியுள்ளாய். ஒரு தொடரிலாவது ஒரே கருத்தை முழுமையாக வைத்து விளக்கியிருக்கிறாயா என்றால் இல்லை.

நீ எழுதுகிறாய்: ‘’ஈஸா நபி இறக்கவில்லை என்று தான் மிர்சா சாஹிபும் நம்பி வந்தார். அதை தனது நூலில் எழுதியும் இருக்கிறார் (பார்க்க மிர்சா சப்ஜக்ட் பாகம் 3,4) தன்னைப் பார்த்து ஈஸா, ஈஸா என்று அல்லாஹ் அழைத்த போது கூட ஈஸா மரணிக்கவில்லை, மீண்டும் வருவார் என்று தான் நம்பினார்....’’

Monday, May 9, 2016

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் சப்ஜக்ட் - 19


‘மிர்சா எனும் போலி சாமியார்’ – என்று உனது தொடரை ஆரம்பித்துள்ளாய். மிர்சா சாஹிப் நபியா இல்லையா என்பது விவாதத்தின் ஒரு தலைப்பாக இருக்க நீ எதை எழுதுகிறோம் என்ற அடிப்படையே இல்லாமல் எழுதுகிறாய்.

மிர்சா சாஹிபை போலி சாமியார் என்று கூறியிருப்பதன் மூலம் உனக்கு குரான் அறிவு கொஞ்சம் கூட இல்லை என்பதை நிரூபித்துள்ளாய்.

போலி சாமியாரைப் பற்றி குரான் என்ன கூறிகிறது தெரியுமா?

Sunday, May 8, 2016

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் சப்ஜக்ட் - 18


‘’ஈஸா தான் மிர்சா என்பது உவமையா உளரலா?’’ - என்று உனது தொடரை ஆரம்பித்துள்ளாய்.

யார் உளறியுள்ளார் என்பதை சிந்திக்கக்கூட உன்னால் முடியாமல் போய்விட்டது பரிதாபம் தான்.

அஹ்மத் –அலை- அவர்கள் தன்னை ‘ஈசப்னு மர்யம்’ அதாவது ‘மர்யமின் மகன்’ என்று வாதித்துள்ளார்கள். இது உவமையாகக் கூறப்பட்டுள்ளது என்று எடுத்துக் கூறிய பின்னரும் நீங்கள் கிண்டல் கேலி செய்கிறீர்கள்.